சுண்டு

ஓவியர்:வி. அகல்யா, 1ஆம் வகுப்பு

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவளானாலும் பிற குழந்தைகள் வரையும்போது உடனிருந்து வரைந்தால் ஓவியம் நன்றாக வரும் என்பதை இன்னும் உணராத இக்குழந்தை மும்முரமாக வேறு பணி செய்துகொண்டிருக்கும் நேரத்தில் காகிதம், அட்டை, பென்சில் சகிதம், "மாமா, டிராயிங் வரையட்டுமா?" என்று கேட்டு வருவாள். சந்தர்ப்பம் சரியில்லாததால் நாளைக்கு வரையலாம் என்று சொல்வேன், ஆனால் நாளை வருவதில்லை அவளும் வரமாட்டாள். இவள் இதுவரை வரைந்த ஒரே ஓவியம் சுண்டுதான். பைன்ட் மென்பொருள் கொண்டு இவள் வரைந்த பென்சில் ஓவியத்துக்கு வண்ணம் தரப்பட்டுள்ளது. இவள் கூடவே 2 வயதுச் சிறுமியான இவளது தங்கையொருத்தி, "மாமா, நானும் ஆயிங் அய ஓயேன் (நானும் டிராயிங் வரையப்போறேன்)' என்று வந்து காகிதத்தில் தன் கிறுக்கல்களை இட்டுக் கொடுத்துவிடுவாள். பொழுது நன்றாகப் போகிறது



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home